on
குலசை
- Get link
- X
- Other Apps
ஒருவருடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நல குறைபாடுகள் மற்றும் உறவுகளின் இடையில் பல்வேறு பிரச்சனைகள் போன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும்.எனவே ஒருவரின் வீட்டில் தீய சக்திகள் எதுவுமே நெருங்கமால் இருக்க ஓர் அற்புத பரிகாரம் ஒன்றினை பற்றி இங்கு பார்ப்போம்.
ஒரு சிகப்பு அல்லது கருப்பு கயிற்றை எடுத்துக் கொள்ளுங்கள். கயிறு ஊசி நுழையும் அளவிற்கு மெல்லியதாக பார்த்துக் கொள்ளுங்கள்.
ஊசியை நுழைத்து நுனியை நன்றாக கட்டிக் கொள்ளுங்கள். இப்போது நுனியில் இரும்பு ஆணியை நன்றாக முடிச்சுப்போட்டு இறுக்கமாக கட்டிக் கொள்ளுங்கள். பிறகு கறித் துண்டு ஒன்றை இதேபோல் இருக்கமாக கட்டிக் கொள்ளுங்கள்.
பின்னர் ஊசி வாயிலாக புள்ளிகள் இல்லாத நல்ல எலுமிச்சம் பழம் ஒன்றை எடுத்து நுழைத்துக் கொள்ளுங்கள்.
இறுதியாக பச்சை மிளகாய்களை ஒற்றைப்படையில் 7 அல்லது 9 என்ற எண்ணிக்கையில் ஒரு முனை அந்தப்பக்கமும் ஒரு முனை இந்த பக்கமும் பார்க்கும்படி ஒன்று மாற்றி ஒன்று ஊசியில் நுழைத்து கொள்ளுங்கள்.
ஊசியுடன் சேர்த்து அப்படியே வாசலில் கட்டி விடுங்கள். வாரம் தோறும் நீங்கள் மாற்றும் பொழுது உங்களுக்கு வசதியாக இருக்கும்.
அதிலிருக்கும் காய்ந்து போன எலுமிச்சை மற்றும் பச்சை மிளகாய்களை மட்டும் நீக்கிவிட்டு புதியதாக மாற்றிக் கொள்ளுங்கள்.
வீட்டு வாசலில் கட்டப்படும் திருஷ்டி எலுமிச்சையை வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமையில் காலை வேளையில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் உங்களை எந்த கெட்டதும் நெருங்கவே நெருங்காது. குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
Comments
Post a Comment