https://www.facebook.com/1061509513863393/posts/2838637746150552/
#Share_maximum
பயணி: சார் பஸ் இன்னமும் வரல
BM: ஒட்ட ஆள் இல்லை சார், வராது
திருச்செந்தூரில் இருந்து குலசை மார்க்கமாக முதலூர் வரை செல்லும் பேருந்து தடம் எண் 6 A இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் கடைசி பேருந்தாகும்,
இதனை நம்பியே தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் சுற்றுப்புற ஊர்களில் வேலைக்கு சென்றுவரும் பயணிகள்,
தோப்பூர் முதல் முதலூர் வரையில் பயனிக்கும் பயணிகளாக உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த பேருந்து சரியாக இயக்கப்படுவதில்லை காரணம் கேட்டு பயணிகள் மேலாளரை தொடர்புகொண்டால் பெரும்பாலும் தொடர்பு துண்டிக்கப்படும், அதிசயமாக சில சமயங்களில் தொடர்பில் வரும் BM பயணி ஒருவரிடம் உரையாடிய ஒலிப்பதிவை தான் கீழே நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
இந்த பதிவில் ஓட்ட ஆள் இல்லை என்று கூறப்படும் இந்த வழித்தடத்தில் தான் காலை முதல் மாலை வரை பல சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் பணிமனையின் வருமானத்தை பெருக்க எடுக்க முயற்சிப்பது சரிதான் ஆனால் வழக்கமாக செல்ல வேண்டிய பேருந்துக்கு மட்டும் ஓட்டுநர்கள் இல்லாமல் போவது ஏன்.
திருச்செந்தூர் பணிமனையின் மேலாளரின் பதில் பொறுப்பற்று உள்ளது. இது போன்று நிலை மீண்டும் தொடருமானால் பயணிகளை பணிமனைக்கு எதிராக போராட்டம் மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படு வார்கள்.
எனவே இந்த வழித்தட பேருந்தை உரிய நேரத்தில் முறையாக இயக்க பணிமனை ஆவணம் செய்ய வேண்டியது அவசியமாகும.
குறிப்பு : இரவு 8.45 pm இயக்கப்பட்டு வந்த வழி தடம் எண் 12 ம் நிறுத்தப்பட்டுள்ளது.
https://www.facebook.com/1061509513863393/posts/2838637746150552/
Comments
Post a Comment