உடன்குடி கருப்பட்டியின் சிறப்புகள் மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் முறை பற்றிய சிறப்புத் தொகுப்பு....!!!
தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் கருப்பட்டிகளில் உடன்குடி பகுதிக் கருப்பட்டி சுத்தம் மற்றும் சுவைக்குச் சிறப்புப் பெயர் பெற்றதாகும்.
இது திருசெந்தூரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு கிராமம். திருசெந்தூரில் இருந்து இரு பக்கமும் பனை மரங்கள் அடர்ந்த சாலையில் பயணம் செய்தால் வரும் இந்த ஊர், மிகவும் அமைதி எனலாம்.
இன்றைய காலகட்டங்களில் கருப்பட்டி என்று சொன்னாலே ஐயே என்று முகம் சுளிக்கும்படி ஆகிவிட்டது எனலாம். இன்று எங்கும் எதிலும் சர்க்கரை என்றாகிவிட்ட சூழலில் கருப்பட்டி தேடி செல்வது என்பது கேலிகூத்து என்றுதான் சிலர் நினைப்பர், ஆனால் மக்கள் இன்றும் இதன் மேல் நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் .
இன்றும் தென்மாவட்டங்களில் கருப்பட்டி என்பதை ஒரு மருத்துவ பொருளாகவும், சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்துகின்றனர்.
நகரத்தில் பிறந்து வளர்ந்து பனை மரம் பார்க்காமல் வளர்ந்த இந்த தலைமுறைக்கு பனை மரம் என்பதன் ஒவ்வொரு அங்குலமும் பயன் கொடுக்ககூடியது என்பது தெரியுமா?
கருப்பட்டி என்பதின் மருத்துவ குணங்கள் தெரியுமா?
ஒரு பனை மரம் சுனாமியையும் தாங்ககூடிய வலிமை உடையது என்பது தெரியுமா ?
நமது தமிழ் எழுத்துக்களும், காப்பியங்களும் பனை ஓலையில் எழுதப்பட்டது என்பது தெரியுமா ?
நம் தமிழ் நாட்டின் மாநில மரம் எது தெரியுமா? :
பனை (Palmyra Palm), பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்க படுகின்றன.
பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையாது.
கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.
பனை மரம் சர்க்கரை பல தாவரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது அதில் கரும்பு, பனை, தென்னை முக்கியமானவை. சர்க்கரையை கரும்பினால் செய்கின்றோம், வெல்லம் என்பதில் இரு வகை உண்டு. கரும்பு வெல்லம், பனை வெல்லம், கருப்பட்டி என்பது பனையில் செய்யப்படும் ஒரு இனிப்பு. இதில் பனை வெல்லம் என்பதை கருப்பட்டி என்கிறோம். கருப்பக்கட்டி அல்லது கருப்பட்டி, பனை அட்டு என்பதால் பனாட்டு என்றும் வழங்கப்பட்டது.
கருப்புக்கட்டி என்றால் கரும்பில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் பொருள்படும். கரும்பஞ்சாறு எப்படி கருப்பஞ்சாறு ஆனதோ, அது போல. இன்று கருப்புக்கட்டி அல்லது கருப்பட்டி என்பது பனங் கருப்பட்டி, தென்னங் கருப்பட்டி மற்றும் ஈச்சங் கருப்பட்டியைக் குறிக்கிறது.
பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது.
இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக. பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும்.
இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி. சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுடுவாங்க. இதனால் மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார். இதை லிட்டர் 10 ரூபாய்க்கு வாங்கி, 20 ரூபாய் வரை விற்கிறார்கள்.
பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம். பதநீர் எடுத்தாச்சு ! பதநீர் காய்ச்சப்படுகிறது…….. இப்படி எடுக்கப்பட்ட பதநீரைதான் காய்ச்சி கருப்பட்டி செய்கின்றனர்.
இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது.இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க.
கருப்பட்டி பயன்கள்
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.
குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.
ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம்.
இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன்
கருப்பட்டி உடம்புக்கு எவ்வளவு நல்லது என்பது தெரியுமா ?
ஒவ்வொரு விஷயமும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்……
தரமான கருப்பட்டி
வாங்கலாம் வாங்க...
பலம்தரும் பனங்கற்கண்டு
தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. சமீபகாலமாக பனங்கற்கண்டு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்கிற ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன், அதனுடைய பெருமைகள் பற்றி விரிவாகக் கூறுகிறார்.
பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம்.
குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது.
பனங்கற்கண்டில் உள்ள உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் (Anti oxidants) நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இது, நாம் அன்றாட வாழ்வில் உற்சாகமாக செயல்படுவதற்கும் உதவி செய்கிறது. இரும்புச்சத்து, பொட்டாசியம், சிங்க், வைட்டமின் B1, B2, B3 மற்றும் Low Glycemic Index உடையதாகவும் இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்ததாக இருக்கிறது.
பல்வேறு மருத்துவ சிறப்புகளைப் பெற்றுள்ள பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது
நல்லது.
நீண்ட நாட்களாக வயிற்றுப் புண் நோயால் அவதியுற்று வருபவர்கள், வாயிலிருந்து புகை வருவது போன்ற உணர்வு மற்றும் நெஞ்சுக்கரிப்பு போன்ற தொந்தரவுகளால் அவதியுறும் நோயாளிகள் போன்றோர் கொத்தமல்லி கஷாயத்தில் பனங்கற்கண்டை கலந்து பருகலாம்.
நீண்ட நாட்களாக சளி தொந்தரவுகள், நுரையீரல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் திரிகடுகு கஷாயத்தில் பனங்கற்கண்டு கலந்து பருகலாம். ஆனால், இவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மாதவிடாய் சீராக வராத இளம்பெண்களுக்கு பனங்கற்கண்டு ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்கிறது. எள்ளு கஷாயத்தில் திரிகடுகு சூரணத்தோடு தேவைக்கேற்ப சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து பயன்படுத்தி வந்தால் மாதவிடாய் சீராகும்.
நீரிழிவு நோயாளிகள் மருத்துவர் ஆலோசனைப்படி நெல்லிச் சாற்றுடன் பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டு வந்தால் அந்த நோயை கட்டுக்குள்
வைக்கலாம்.
* சுவாசம் மற்றும் சைனஸ் பிரச்னை உடையவர்கள் நீர்த்து இருக்கிற பாலில் பனங்கற்கண்டு, சிறிதளவு சுக்குப்பொடி, மஞ்சள்பொடி கலந்து பயன்படுத்தலாம்.
சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகள் சாப்பிட்ட பின்பு நமது வாயில் கசப்புத்தன்மை தோன்றினால், வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக சிறிதளவு பனங்கற்கண்டை சாப்பிடலாம். அதேபோல் அந்த மருந்துகளை பாலில் கலந்து குடிக்குமாறு மருத்துவர் பரிந்துரைக்கும்போதும் வெள்ளைச் சீனிக்கு பதிலாக பனங்கற்கண்டை சேர்ப்பது நல்லது.
இதனால் மருந்தின் வீரியம் குறையாமல் இருப்பதோடு உடலின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. அயல் நாட்டிலிருந்து கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்கள், பழங்கள் அல்லது நம் நாட்டில் கிடைக்கிற பொருட்களிலிருந்து அயல் நாட்டினரைப் பின்பற்றி தயாரிக்கக்கூடிய உணவுப் பொருட்கள் போன்றவை எப்பொழுதும் நம் உடல் நலனுக்கு சிரத்தை தரக்கூடியவைகளாகவே இருக்கிறது. இதற்கு நாம் தற்போது பயன்படுத்திவரும் சீனி என்கிற வெள்ளைச் சர்க்கரையே மிகச் சிறந்த உதாரணம்.
பல்வேறு படிநிலைகளில் வேதிவினைகளுக்கு உட்படுத்தப்பட்டு தயார் செய்யப்படும் சீனியை தவிர்ப்பதோடு அதற்கு பதிலாக நம்மைச் சுற்றி வளரும் பனையிலிருந்து தயாரிக்கப்படும் பனங்கற்கண்டு, பனைவெல்லம் போன்றவற்றை உணவிலும், பானத்திலும் பயன்படுத்துவது நல்லது. இதனால் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக தொந்தரவு செய்யும் நீரிழிவு நோயிலிருந்து நமது உடலைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.
தமிழகத்தின் பாரம்பரிய முறைகளின்படி தயாரிக்கப்படும் பனங்கற்கண்டு, வெள்ளை சர்க்கரையைவிட மிகவும் சிறந்தது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதுபோன்ற நமது பாரம்பரிய உணவுப் பொருட்களை நாமும் நம் சந்ததியினரும் பயன்படுத்தும் வண்ணம் செய்தால் அனைவரும் நோய் நொடிகளின்றி வளமோடு வாழலாம்’’ என்கிறார் மருத்துவர் பாலமுருகன்.
பனங்கற்கண்டு பால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலில் தேவையான அளவு பனங்கற்கண்டு, சிறிதளவு ஏலக்காய் கலந்து காலை, மாலை இருவேளையும் பருகி வருவதால் உடலுக்கு உற்சாகமும் நிறைவான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இந்தப் பால் வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றவற்றுக்கும் நிவாரணம் அளிப்பதோடு, நல்ல தூக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பருகி வருவதால் ஆண்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகமாகும்...
Comments
Post a Comment